பிச்சைக்காரன் -2 ட்ரைலர் வெளியீடு - என்ன கதையாக இருக்கும் என யூகிக்கும் நெட்டிசன்கள்

பிச்சைக்காரன் -2 ட்ரைலர் வெளியீடு - என்ன கதையாக இருக்கும் என யூகிக்கும் நெட்டிசன்கள்

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் பிரமாண்டமாய் உருவான "பிச்சைகாரன் -2" படத்தின் புதிய  அப்டேட் வந்தாச்சி..! - JOBS தமிழ்

அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.

பிச்சைக்காரன் - 2 கதையை எழுதி முடித்த நடிகர்! இயக்குனர் யார்? | pichaikaran  2 movie story completed but whose the director?

மேலும் படிக்க | மே- 1 உதயநிதியின் மாமன்னன் FIRST LOOK !!!


விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி முதன்முதலில் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதனை இவரது ப்ரோடுக்ஷன் நிறுவனமான Vijay Antony Film Corporation தயாரித்துள்ளது.