இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் ரத்து...தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் ரத்து...தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இனி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் இதுவரை மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இந்த வயது வரம்பை மாற்றி, ஐந்து வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ”தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” - தலைவா் எா்ணாவூா் நாராயணன் உறுதி!

இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும், ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசிதழில் தகவல் வெளியாகியுள்ளது.