50 சதவீத பயணிகளுடன் 23 மாவட்டங்களில் திங்கள் முதல் பேருந்துகள் இயக்கம்...

நாளை மறுநாள் முதல் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

50 சதவீத பயணிகளுடன் 23 மாவட்டங்களில் திங்கள் முதல் பேருந்துகள் இயக்கம்...

50 சதவிகித பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள முழுகட்டுப்பாடுகளுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊருடங்கு ஜுலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு  அறிவித்துள்ள வகை  2-ல்  குறிப்பிட்டுள்ள தளர்வில்  அரியலூர்,  கடலூர், தருமபுரி,   திண்டுக்கல், கன்னியாகுமரி,    மதுரை,   தேனி, தென்காசி, திருநெல்வேலி,   விழுப்புரம்,   வேலூர்   மற்றும் விருதுநகர்   உள்ளிட்ட 23 மாவட்டங்களில்  பொதுப்   பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலையான  வழிகாட்டு  நiடுமுறைகளைப்  பின்பற்றி,  குளிர்  சாதன  வசதி இல்லாமல்,   50   சதவிகித   இருக்கைகளில்   மட்டும்   பயணிகள்   அமர்ந்து   பயணிக்கும்  வகையில்  மேலும் 23 மாவட்டஙகளில் பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும்  பேருந்துகளை  உரிய  முறையில் கிருமி   நாசினி   கொண்டு   சுத்தம்   செய்து,   அரசு   விதித்துள்ள   நெறிமுறைகளைப்   பின்பற்றி இயக்கிடுமாறு   அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.  பொதுமக்கள்  அரசு  விதித்துள்ள  வழிக்காட்டு  முறைகளான,  முகக்கவசம்  அணிந்து,  சமூக  இடைவெளியினைப்  பின்பற்றி  பயணித்திடுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.