“ஆனால் எதிரிகள் அவர் பின்னாலேயே இருந்திருக்கிறார்கள்...” உதயநிதி ஸ்டாலின்!!

“ஆனால் எதிரிகள் அவர் பின்னாலேயே இருந்திருக்கிறார்கள்...” உதயநிதி ஸ்டாலின்!!

மோடியிடம் அதிமுக அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதே அவர்களின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்காகத் தான்.  ஆனால் நான் என் வழக்குகளுக்காகவோ,வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவோ மோடியை சந்திக்கவில்லை, நான் சந்தித்தது தமிழ்நாட்டில் நீட் விலக்குகாக தான் என உதயநிதி ஸ்டாலில் கூறியுள்ளார்.

சட்டத்துறை சார்பில்:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சட்டத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றியமும் மாநிலங்களும் என்ற தலைப்பின் இறுதி போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, இளங்கோவன் எம்.பி கலந்து கொண்டனர்.  பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

சட்டதுறை:

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக கட்சியில் 23 அணிகள் இருந்தாலும் கூட சட்ட துறை தான் நம்பர் 1 எனவும் பொய் வழக்கு போட்டு கலைஞர்,முக ஸ்டாலின்,என்னையும் காப்பாற்றியது திமுக சட்ட துறை தான் என தெரிவித்தார்.  மேலும் A1, A2வாக ஜெயலலிதாவையும் சசிகலாவையும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை தான் எனவும் வார் ரூம் என்றாலே தற்போது கெட்டவார்த்தை போல் பார்க்கின்றனர் எனவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் நான் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் மனிதன் எனவும் அதில் நான் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.

அடிமை அதிமுக:

மேலும் ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டும் என கூறிய போது திமுக ஆட்சி நடைபெற்றதால் மாற்றவில்லை எனவும் அடிமை அதிமுக ஆட்சி நடைபெற்றிருந்தால் மாற்றி இருப்பார்கள் எனவும் கூறிய அவர் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறை பிரதமர் வருகையின் போதும் அவர் தரும் புத்தகமும் மேடை பேச்சும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது எனக் கூறினார்.  

எதிரிகளே இல்லை:

எல்லா அதிகாரங்களையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசு நினைப்பது தவறு எனக் கூறிய உதயநிதி அதிகாரக் குவியல் என்பதே தவறு எனவும் ஜெயலலிதா அதிகாரங்களை குவித்து வைத்திருந்தார் எனவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று கூறினார் ஜெ எனவும் தெரிவித்த அவர் ஆனால் எதிரிகள் அவர் பின்னாலேயே இருந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

மோடி சந்திப்பு:

மோடியிடம் அதிமுக அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதே அவர்களின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்காகத் தான் எனவும் ஆனால் நான் என் வழக்குகளுக்காகவோ,  வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவோ மோடியை சந்திக்கவில்லை எனவும் கூறிய உதயநிதி நீங்களும் சரணடைந்துவிட்டீர்களா என்று சிலர் கேட்டார்கள் எனவும் நான் விளையாட்டுத்துறை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும்,  நீட் ரத்து குறித்தும் மோடியிடம் நேரடியாக பேசி கோரிக்கை வைத்தேன் எனப் பேசினார்.

இதையும் படிக்க:   கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்