"கோவிட் மருந்துகளை, இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது", ஜார்கண்ட் ஆளுநர்  சி.பி.ஆர் பெருமிதம்!

"கோவிட் மருந்துகளை, இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது", ஜார்கண்ட் ஆளுநர்  சி.பி.ஆர் பெருமிதம்!

கோவையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஜார்கண்ட் ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, புகழ்ந்து பேசியுள்ளார்.

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில், ஜார்கண்ட் ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழா நடைபெற்ற்றுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசியபோது, கொங்கின் பெருமையை உயர்திய சி.பி.ஆர். ஆளுநரை கவுரவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவரையும் கவுரவப்படுத்துவது போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பேசிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டு பேர்தான் எமனை வென்றவர்கள். ஒன்று எம்.ஜி.ஆர் ,மற்றொருவர் கே.எம் சி எச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிசாமி, எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலை, தமது 35-வது வயதில் ஐபிஎஸ் பணியை துறந்து, தற்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார். இதை அரசியலுக்காக சொல்லவில்லை, எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கோவிட்டுக்கு மருந்து இல்லாத சூழலில் எண்ணற்ற ஏழை நாடுகளுக்கு முதல் முதலாக இந்தியாவிலிருந்து கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக அனுப்பப்பட்டது, எனப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: "தூரிகையாக மாறிய கிரிக்கெட் பேட்" - தோனியை வரைந்து ஓவியர் அசத்தல்!