” கோவை சரக டிஐஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

” கோவை சரக டிஐஜி விவகாரம்  தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” -  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடியில்  புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டு காலத்தில் 1 லட்சம் கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற் கொலை செய்த சம்பவம் என்பது அவரது பணியில் எந்த அளவிற்கு பணி சுமை இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதன் உண்மையை வெளிபடுத்த வேண்டும். அன்மை காலமாக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு சிக்கி வருகின்றனர் ஒருவேளை அந்த வகையில் ஏதேனும் விசயங்கங்களுக்கும் கோவை சரக டிஐஜி தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும். 

ஜூலை 12- முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை  தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக மாவட்டம் தோறும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது இதில் மது கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மதுக்கடைகள் முன்பு வரும் 15 -ம் தேதி பெண்களை திரட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் மதுபாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

பொது சிவில் சட்டம் குறித்து பொது சிவில் சட்டம் என்றால் என்ன அது என்ன காரணத்திற்காக கொண்டுவரப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் பின்பு வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தான் எழுதிய ’டாஸ்மாக் - குடியின் பிடியிலிருந்து மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்’ என்ற புத்தகத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

இதையும் படிக்க   | 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு ..!