அதானி வருமானம் குறித்த விளக்கத்தை அளிக்க முடியுமா? - அண்ணாமலைக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

அதானி வருமானம் குறித்த விளக்கத்தை அளிக்க முடியுமா? - அண்ணாமலைக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, அதானி வருமானம் குறித்த விளக்கத்தை அளிக்க முடியுமா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு கடந்த 8 ஆண்டுகளில் பாஜக எந்த திட்டம் கொண்டு வந்தது என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும் என்றார்.  இந்தி மொழி திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திய அழகிரி, தமிழக அமைச்சர்கள் மீது அண்ணாமலை அள்ளி வீசிய பொய் குற்றச்சாட்டுகள்  கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.