அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...!

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...!

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆண்டு காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படிக்க   |  "இனி முதலமைச்சருக்கு தூக்கம் வராது" ஜெயக்குமார் தகவல்!