முல்லைப் பெரியாறு அணை  ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி வழக்கு... தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசு மனு...

முல்லைப் பெரியாறு அணை  ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மனு.

முல்லைப் பெரியாறு அணை  ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி வழக்கு... தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசு மனு...

தமிழகம்- கேரளா இடையிலான முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளது.

கேரளா- தமிழகம் இடையே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரி கொச்சியை சேர்ந்த சுரக்‌ஷா அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளதாகவும், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்  முல்லைப்பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையில் வலுவாக உள்ளது உள்ளதாக உச்சநீதிமன்றம் அதுதொடர்பாக 3 தீர்ப்புகளை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆனால் அணை பராமரிப்பு குறித்து அக்கறை கொள்வதாக கூறும் சுரக்‌ஷா அறக்கட்டளை, அணையை பலப்படுத்தவும், பராமரிக்கவும் இடையூறாக இருக்கும் கேரளா அரசின் போக்கு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. 

அதுமட்டுமல்லாது அணை நீர்பிடிப்பு பகுதியில் பெரிய அளவிலான கார் பார்க்கிங் கட்டுமானத்தையும் கேரளா அரசு கட்டி வருவதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளதாவும் அந்த மனுவில் அரசு குறிப்பிட்டுள்ளது.