காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...!

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...!

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை முறையாக வழங்கிவில்லை. இதனால் தமிழ்நாட்டில் குருவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுட்டு தண்ணீர் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாக திறக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை, செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், காவிரி வழக்கு இன்று விசாரணை பட்டியலில் இடம் பெறாததால் தமிழ்நாடு அரசு தரப்பில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 21ஆம் தேதி காவிரி வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.  இதனால் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது. இதனிடையே, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. 

இதையும் படிக்க   |  பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்!!