தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம்த தகவல்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம்த தகவல்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக - இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அடுத்த 4,5 நாட்களில் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரகூடும் இதன் காரணமாக அடுத்த நான்கு, ஐந்து நாட்களுக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.