தென் கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை, டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும்  கூறப்பட்டுள்ளது.  வரும் 13 மற்றும் 15ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், 

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 30 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்றும், நாளையும், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.