3 நாட்களுக்கு  மிதமான மழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களின்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

3 நாட்களுக்கு  மிதமான மழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.