மக்களே உஷார்! அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடம் தெரிஞ்சுக்கோங்க...!!

மக்களே உஷார்! அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடம் தெரிஞ்சுக்கோங்க...!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வானிலை அறிக்கை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது என குறிப்பிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளதாக தெரிவித்தார். 

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 93 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார். 120 ஆண்டுகளில், இது மூன்றாவது அதிகபட்ச மழை எனத் தெரிவித்த அவர், 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதம் அதிகளவு மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.  

இதையும் படிக்க: எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் கூறினார்.