டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி...எதிர் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த பிடிஆர்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி...எதிர் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த பிடிஆர்!

டி.என்.பி.எஸ்.சி.யில் கொண்டு வரப்படும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 

சட்டப்பேரவையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் தட்டச்சு தேர்வு முடிவுகளில் குளறுபடி நடைபெற்றதாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்து பேசினர்.  

இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்த ராகுல்காந்தி விவகாரம்...இருஅவைகளும் ஒத்திவைப்பு!

இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முதலமைச்சரின் ஆலோசனைப்படி  தற்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், 7000 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிப்பதாக குறிப்பிட்ட அவர், ஒரே நாளில் தேர்வு என்றால் பல்வேறு குளறுபடிகள் இருக்க தான் செய்யும் என்றும், இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தேர்வு எழுதுவதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்