திருவள்ளுவர் சிலைக்கு ராசாயன கலவை பூசும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரம் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் சிலைக்கு ராசாயன கலவை பூசும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மணிமண்டபம்,133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவையை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில் கடல் உப்பு காற்றால் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மனோ தங்கராஜ், திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுகிறது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை உலக சுற்றுலா தரத்திற்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.