அதிமுக டெல்லி அலுவலக செயலாளர் உடலுக்கு ஈ.பி.எஸ் அஞ்சலி...

உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமான அதிமுகவின் டெல்லி அலுவலக செயலாளர் சந்திரசேகர் உடலுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக டெல்லி அலுவலக செயலாளர் உடலுக்கு ஈ.பி.எஸ் அஞ்சலி...

டெல்லி மாநில அதிமுக அலுவலகத்தின் செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த சந்திரசேகரன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

உறவினர்களின் அஞ்சலிக்காக சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த சந்திரசேகரனின் உடலுக்கு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சந்திரசேகரன் மறைவால் துன்பத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமித் ஷா சென்னை வருகை..! யாரை சந்திக்கிறார் அமித் ஷா? பரபரக்கும் அதிமுக..!

இதில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், சென்னை தெற்கு வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | ஈபிஎஸ் வழியில் ஓபிஎஸ்...ஸ்டாலினுக்கு நெருக்கடி...!