இந்த மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை!

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.