உலக அளவில் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்கிறது - ஆளுநர்!

உலக அளவில் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்கிறது - ஆளுநர்!

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மரபியல் நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மரபியல் நிறுவனத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், அப்பல்லோ நிர்வாகம் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவையை வழங்கி வருவதாக கூறியவர், இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் சென்னை, மருத்துவ சேவை மையமாக திகழ்வதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : வேங்கை வயல் விவகாரத்தில் ட்விஸ்ட்! 8 பேர் மறுப்பு ; 3 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை...!

தொடர்ந்து பேசிய அவர், ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அவர்களை நாட வேண்டிய சூழல் ஏற்படும் என்று எண்ணிய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவசேவை வழங்கப்படுவதாகவும், கொரோனா காலத்தில் உலக நாடுகளே அஞ்சிய நிலையில், இந்தியா தடுப்பூசி தயாரித்ததோடு 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும், 2047 ஆம் ஆண்டு நாடு 100 வது சுதந்திர தினம் கொண்டாடும் பொழுது அனைத்து துறைகளிலும் முதன்மையான துறையாக இருக்கும் என்றார்.