மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஆலோசனை...!

மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஆலோசனை...!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ‌அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

குடும்ப தலைவிகளுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள்முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : டி. ஐ.ஜி. விவகாரம் ; குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை! - அண்ணாமலை

அதன்படி, இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார்.