தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக  அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகளை தவிர்த்து  அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களை கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 11ம் தேதி நடந்த முரசரங்கம் விவாத நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததன் எதிரொலியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.