முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் ஐ.சண்முகநாதனுக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கிய முக ஸ்டாலின்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மற்றும் ஆரூர்தாஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் ஐ.சண்முகநாதனுக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கிய முக ஸ்டாலின்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’  மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது”  ஆண்டுதோறும் வழங்கப்படும் என சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆரூர்தாஸ் இல்லத்துக்கு நேரடியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதை நேரிடையாக வழங்கினார்.

இதேபோல் கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரப்படுத்தினார். 

இதையடுத்து  சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் அறிஞர்களுக்கு முதலமைச்சர் வீட்டு மனை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பயணாளிகள் முதல்வருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.