பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பயனாளிகளுக்கு வீடுகளின் சாவியை வழங்குகிறார்!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு  நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

பெரியார் நினைவு சமத்துவபுரத்தை  இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பயனாளிகளுக்கு வீடுகளின் சாவியை வழங்குகிறார்!!

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்றிரவு புதுச்சேரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு வானூர் அருகே பெரிய கொழுவாரியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீடுகளின் சாவியை வழங்குகிறார்.

இதை தொடர்ந்து, ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.

இதனையடுத்து, திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் கிராமத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். 

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மண்டல சரக டிஐஜி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.