ஜூன் 17 ஆம் தேதி  டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி  டெல்லிக்கு சுற்றுப்பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஜூன் 17 ஆம் தேதி  டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.