வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார் ...

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணி நிறைவடைந்தது. அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை, ஊதா ஆகிய நிறங்களை சேர்த்து அதன் மூலம் பல்வேறு வண்ணங்களை உருவாக்கி ஒளிரூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஒளிரூட்டும் அமைப்பின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சாதனை மலரையும் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஒளிரூட்டும் அமைப்பை திறக்கும் வாய்ப்பை அளித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வண்ண வண்ண விளக்குகள் அமைத்து மாநகராட்சி கட்டிடத்துக்கு புதுப்பொலிவு ஊட்டிய மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.