மகளிர் உரிமை தொகை திட்டம்; முதல்வர் இன்று ஆலோசனை!

மகளிர் உரிமை தொகை திட்டம்; முதல்வர் இன்று ஆலோசனை!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மாதம் ஒரு கோடி பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இதுவரை 1 கோடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்தும், பயனாளர்களை முறையாக தேர்வு செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்க உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
 
இதையும் படிக்க:இராஜேந்திரசோழன் பிறந்த நாள்; ஜொலிக்கும் கங்கை கொண்ட சோழபுரம்!