மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தல்...

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு சில கருத்துகளை அறிவுறுத்தியுள்ளார்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தல்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய முதலமைச்சர் ஒரு சிலவற்றை அறிவுறுத்தியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்...

மேலும் படிக்க | உள்ளாட்சி தினத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிகிறார் முதலமைச்சர்...

  • ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 

  • நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும். 

  • பொதுத் தொலைபேசி எண்களை பரப்ப வேண்டும்.

  • நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.

  • பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  • மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஒன்றிய அரசு மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!கூட்டணியிலிருந்து விலகுகிறதா அதிமுக?

  • மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு ஆகும்.

  • பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  • பழுதடைந்த பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

  • வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

  • மாநகர மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர்வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணியுங்கள்.

மேலும் படிக்க | வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள் சடலமாக மீட்பு...

  • பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

  • கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்படுவதை உறுதி வேண்டும்.

  • மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்து இயங்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழைகளில் முதலிடம் பிடித்த நுங்கம்பாக்கம்...!

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்பாராத விதமாக ஏரிகளும், நகுளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, மழை நீர் தங்க இடமில்லாத காரணத்தால், நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், விபரீதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக என்னென்ன செய்யலாம் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.