முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மை ; குற்ற சம்பவங்களை பட்டியலிட்ட இபிஎஸ்.

முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மை ; குற்ற சம்பவங்களை பட்டியலிட்ட  இபிஎஸ்.

முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 4 நாட்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.

அதில், ஆளும் கட்சியின் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்,

எம் எல் ஏ நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை!சென்னை நந்தனத்தில் கல்லூரி மாணவி படுகொலை சம்பவம், சென்னை புறநகர் ரயிலில் செயின் பறிப்பின்போது, ரயிலில் இருந்து தள்ளப்பட்டு இளம் பெண் பிரீத்தி உயிரிழந்தது வரையிலான குற்ற சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் பறிக்க முயன்ற போது இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...!

மேலும் அவர், “ மக்களையும், சட்டம் ஒழுங்கையும் காப்பாற்ற முடியால், சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், இனியாவது காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கி சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும்”,  என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க    | கட்டு போட 50ரூ... ஸ்ட்ரெச்சர் தள்ள 50ரூ... அட்டூழியம் செய்யும் அரசு மருத்துவமனை!!