முதலமைச்சர் வருகை -கடைகளை அகற்றியதால் பரபரப்பு...!

முதலமைச்சர் வருகை -கடைகளை அகற்றியதால் பரபரப்பு...!

சேலத்தில், வ.உ.சி. பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றக் கூறியதால்,  வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில், ஈரடுக்கு கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  வருகின்ற 11-ம் தேதி மற்றும் 12-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில், கலந்துக்கொள்வதற்காக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளானது, சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகரட்ச ஹாய் நிர்வாகம் சார்பில் நடைபெற்று  வருகிறது. 

குறிப்பாக 11-ம் தேதி மாலை, புதிதாக கட்டப்பட்டுவரும் ஈரடுக்கு கொண்ட  பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் நேரடியாக வருகை தந்து பார்வையிட இருப்பதால் இதற்கான முன்னேற்பாடு வேலைகளை அதிகாரிகள்  துரிதயப்படுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அருகிலுள்ள கடைகளை அகற்றிவருகின்றனர். 

அதன்படி,  சேலம் பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. பூ மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறி, கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதனால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும்  எனக்கூறி, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  நிலவியது.

இதையும் படிக்க     | கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர் உயர்வு...! மக்கள் அவதி...!