12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்...!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்...!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தித் குறிப்பில், 2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு மே மாதம் 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடுவார் என்றும், மாணவர்கள் www.tnresults. nic.in என்ற இணையதள முகவரியில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!

மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும், தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்திகள் வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.