கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலம் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்..! - நகராட்சி நிர்வாகம் தகவல்.

கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலம் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்..! - நகராட்சி நிர்வாகம் தகவல்.

கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலம் ஏழு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று  நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோக்கர்ஸ் வாக் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக்கூடியவைகளில் மிகவும் முக்கியமானதாகும். இந்த கோக்கர்ஸ் வாக் பகுதியில் குறிஞ்சி தோட்டம், தொலைநோக்கி, நடைபாதை, கழிப்பறை வசதிகள், உள்ளிட்டவைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட உள்ளன. 

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பகுதிகளில் முக்கியமானதாகும். இதற்கு காரணம் இந்த பகுதிக்குள் நடந்து மட்டுமே செல்ல முடியும். மலை முகட்டில் மேலே நடப்பதற்கு உரிய பாதை தான் கோக்கர்ஸ் வாக் என்பதாகும். கோக்கர்ஸ் என்பது இந்த பகுதியை கண்டுபிடித்த ஆங்கிலேயரின் பெயராகும்.  பல நூற்றாண்டாக இந்த பகுதி நடப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு படப்பிடிப்புகளும் இந்த பகுதியில் நடத்தப்பட்டு உள்ளது. கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து வைகை அணையை தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்குரிய வசதிகளை நகராட்சி ஏற்படுத்தி உள்ளது. அதேபோல வெள்ள கெவி மலை கிராமத்தையும் இங்கிருந்து பார்க்க முடியும் . இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோக்கஸ் வாக் பகுதி ஏழு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. 

இதையும் படிக்க   } மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி.

இந்த கோக்கர்ஸ் வாக் பகுதியில் குறிஞ்சி தோட்டம், தொலைநோக்கி, நடைபாதை, கழிப்பறை வசதிகள், உள்ளிட்டவைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட உள்ளன.  குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை நவீன நடைபாதையாக மாற்றப்படும் .இந்த தகவலை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 இதையும் படிக்க   }முதல்வரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ...... பெண்களுக்கான மருத்துவ முகாம்..! - மேயர் தொடங்கி வைத்தார்.