கொடைக்கானல் வரும் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள்; காமாண்டோ படையினர் ஆய்வு!

கொடைக்கானல் வரும் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள்; காமாண்டோ படையினர் ஆய்வு!

கொடைக்கானல் வட்டக்கானல் சுற்றுலா தலத்தில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை புரிவதால், பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிரடி காவல் படையினர் தீவிர ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதி அமைதி நிறைந்த இடமாகும், இயற்கை எழில் கொஞ்சும் விதமாக மலை முகடுகள் காட்சியளிப்பதால் இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக, கேரளா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி உள்ளிட்ட மாதங்களில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் வட்டக்கானல் சுற்றுலா தலத்தில் இஸ்ரயேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகள்,உணவகங்கள் ஆகியவற்றில் அதிவிரைவு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டக்கானல் பகுதியில் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதத்தில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி சென்னை அதிரடி விரைவு படை காவல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வட்டக்கானல் பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க:மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்ய மக்கள் எதிர்ப்பு !