ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து, பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு !

நீலகிரி: குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் பள்ளிக்கு செல்லாமல் புறகணிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த தட்டனேரி கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்து மலை வேடன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1993ம் ஆண்டுக்கு முன்பு வரை பழங்குடியினர் என்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக தற்போது வரை இந்து மலை வேடன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ இந்து மலை வேடன் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்கியதற்க்கான காரணத்தை கூறாமலும், ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருவதை கண்டித்து, இன்று தட்டனேரி கிராமத்தில் உள்ள சுமார் 50 குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்களுடன், பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியரும் இதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு ஜாதி சான்றிதழ் இருக்கும் நிலையில் அவருடைய குழந்தைகளுக்கு இந்த ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு 