எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சாலையில் அடுப்பு மூட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சாலையில் அடுப்பு மூட்டி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சாலையில் அடுப்பு மூட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையுர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் ஏற்றி வைத்தும், சாலையில் விறகு மூட்டி அடுப்பு அமைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, அத்தியாவசிய பெருட்களின் விலை உயர்வால் வருகின்ற ஹிமாசல் பிரதேச தேர்தலில் பா. ஜ.க-வின் வெற்றி குறித்து தெரியவரும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியை எப்போது கவிழ்ப்பது என்பது குறித்த  சதி வேலையில் புதுச்சேரி பா. ஜ.க ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.