தொடர்மழை.. சுரங்கப்பாதையை சூழ்ந்த தண்ணீர் ...வாகன ஓட்டிகள் அவதி

நேற்றிரவு முதல் பெய்த மழையால் தாம்பரம் சுரங்கப் பாதை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்மழை.. சுரங்கப்பாதையை சூழ்ந்த தண்ணீர் ...வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று செங்கல்பட்டுமாவட்டம் மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று மாலை முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளன. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தநிலையில் தாம்பரம் தண்டவாளம் அடியில் அமைக்கப்பட்டு உள்ள மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி மூடி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் செல்கின்றர்.

மேலும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து மின் மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.