சமையல் சிலிண்டர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்ந்து 875.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சமையல் சிலிண்டர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்ந்து 875.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டர் விலை கடந்த 1ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மட்டும் 73.50  உயர்த்தி 1761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றம் செய்யவில்லை.

ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயந்து 875.50 விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து 1756 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.