துணை கிராமங்களில் நியாயவிலை கடைகள் திறக்க அரசு முன்வருமா? என்ற பிச்சாண்டியின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த ஐ.பெரியசாமி!

துணை கிராமங்களில் நியாயவிலை கடைகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

துணை கிராமங்களில் நியாயவிலை கடைகள் திறக்க அரசு முன்வருமா? என்ற பிச்சாண்டியின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த  ஐ.பெரியசாமி!

சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், துணை கிராமங்களில் நியாயவிலை கடைகள் திறக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி நெருக்கடி இருப்பினும் தேவைப்படும் இடங்களில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், 150 ரேஷன் கார்டுகளுக்கு பகுதி நேர கடைகளும், 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேர கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துணை கிராமங்களிலும் நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.