நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா.. நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

அடுத்த 10 ஆண்டில் 2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா.. நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத் தூணை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மத்திய கைலாஷ் மேம்பாலம்,  199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், கன்னியா குமரி திருவள்ளுவர் சிலை - விவே கானந்தர் பாறையை இணை க் கும் வ கையில்,  37 கோடி ரூபாய் மதிப்பில் அமை க் கப்படவுள்ள கண்ணாடி இழை நடைமேம்பாலம் ஆ கியவற்றிற் கு முதலமைச்சர் அடி க் கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், ஆயிரத்து 281 தரைப்பாலங் கள் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் க் கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங் களா க மாற்றப்பட உள்ளதா க தெரிவித்தார்.

முதல் கட்டமா க 640 தரைப்பாலங் கள் 610 கோடி ரூபாய் மதிப்பிலும், இரண்டாம் கட்டமா க 430 தரைப்பாலங் கள் ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலும் உயர்மட்ட பாலங் களா க மாற்றப்பட உள்ளதா க முதலமைச்சர் கூறினார்.

வரும் 2026 க் குள் தரைப்பாலங் களே இல்லாத மாநிலமா க தமிழ கம் உருவா கும் என்றும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நம்பி க் கை தெரிவித்தார்.

சென்னை முதல்  மாமல்புரம் வரையிலான கிழ க் கு க் கடற் கரைச்சாலை க் கு  'முத்தமிழறிஞர் டா க்டர் கலைஞர் கருணாநிதி சாலை' என்று பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இவ்விழாவில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சு காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளார் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.