ரேஷன் கடைகளில் போலியான பில் - எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை!

ரேஷன் கடைகளில் போலியான பில் - எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை!

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படாத பொருட்களுக்கு போலியாக பில் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கூடுதலாக பில் போட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிக்க : பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் - சீமான் கண்டனம்!

இந்நிலையில் அனைத்து நியாய விலைக் கடைகளையும்  கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படாத பொருட்களுக்கு போலியாக பில் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.