கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்... புகார் ஆதாரமற்றது என்பதை நிரூபிப்பேன் - ரமேஷ்...

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தன் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை, உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்... புகார் ஆதாரமற்றது என்பதை நிரூபிப்பேன் - ரமேஷ்...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு என்பவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேலு, அல்லாபிச்சை, வினோத் மற்றும் சுந்தராஜன் ஆகியோர்‌ மீது வழக்கு பதியப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது, இதை அடுத்து ரமேஷ் உட்பட ஆறு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 5 பேரை கைது செய்த போலீசார், கடலூர் சி.பி. சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை தேடும் முயற் சியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அவர் இன்று காலை பன்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

இதனிடையே, நீதிமன்றத்தில் சரண் அடைந்தது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள எம்.பி. ரமேஷ், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சில அர சியல் கட் சிகள் தங்களுக்கே உரித்தான பாணியில், திமுக மீது தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். 

திமுக ஆட் சி மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவே, நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாகவும், தன் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.