இந்திய கலாச்சாரம் மீது ஆர்வம்...கடலூர் என்ஜினியரை காதலித்து கரம் பிடித்த லண்டன் பெண்..!

லண்டன் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட கடலூர் என்ஜினியர்...

இந்திய கலாச்சாரம் மீது ஆர்வம்...கடலூர் என்ஜினியரை காதலித்து கரம் பிடித்த லண்டன் பெண்..!

கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர்கள் ராஜாமணி - ஈஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ரஞ்சித் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் பொறியாளர் படிப்பு முடித்து கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். அதே கம்பெனியில் லண்டன் நாட்டை சேர்ந்த அன்னாலுய்சா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பெண் அந்த நாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.

இதனைத் தொடர்ந்து 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது கடலூர் அடுத்த திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறையில் ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சா வுக்கும் திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க ரஞ்சித், அன்னாலுய்சா க்கு திருமாங்கல்யம் கட்டி  பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

பின்னர் இந்த திருமணம் குறித்து மணமகன் ரஞ்சித் கூறும்போது, நானும், அன்னாலுய்சாவும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் பெற்றோரின் சம்மதத்தை பெற்று தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருவீட்டு பெற்றோர்களிடம் உரிய அனுமதி பெற்று இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. 

இதனையடுத்து மணப்பெண் அன்னாலுய்சா கூறும்போது, நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனக்கு இந்திய கலாச்சாரம் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததால், அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இன்று ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டு உள்ளேன். அதுமட்டுமில்லாமல் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை, மங்கல வாத்தியங்கள் முழங்க எங்கள் திருமணம் சிறப்பாக  நடைபெற்றது என கூறினார். 

இதுவரை மடல் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் வளர்ந்து வந்த காதல், தற்போது கடல் கடந்து தமிழ் பாரம்பரியம் பிடித்த காரணத்தினால் பல ஆண்டுகளாக பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற்று திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.