21 ஆம் தேதி நடைபெறுகிறது திமுக எம்பிக்கள் கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

வரும் 21 ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

21 ஆம் தேதி நடைபெறுகிறது  திமுக எம்பிக்கள் கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கு  அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்ச மு.க. ஸ்டாலின் தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். அனைவரும் தவறாமல்  கலந்து கொள்ளுமாறு துரைமுருகன் கேட்டு கொண்டுள்ளார்