திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : விஜய் ஆண்டனியின் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!

மேலும், ஒரு சில மாவட்ட செயலாளர் மீது அவ்வபோது புகார்கள் எழுந்து வருவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர்  மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.