திமுகவின் வாரிசு அரசியல்...2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் - ஜெயக்குமார்!

திமுகவின் வாரிசு அரசியல்...2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் - ஜெயக்குமார்!

திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க : ”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி.ஆர். பி.ராஜா”

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகாமல் இருக்க, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக பல தடங்கல்களை ஏற்படுத்திய நிலையிலும் படம் வெளியாகி வெற்றியடைந்ததாக கூறினார். போஸ்டர் ஒட்டினால் கிழிக்கப்படும் என்று திமுகவினர் மிரட்டல் விடுத்ததால் போஸ்டர் ஒட்டாமல் வெற்றிப் படமாக அமைந்த ஒரே திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு பால் ஊற்றினாலும் தமாஷ் தர்பார் கூட்டத்தில் இன்னும் சில அமைச்சர்கள் உள்ளதாக கூறினார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது பி டி ஆர் போல பொருளாதார வல்லுநர் இல்லை என்றும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர் என்று கூறிய திமுகவினருக்கு இப்போது தெரியவில்லையா என்று கேள்வி எழுப் பினார்.