கற்பனைக்கு எட்டாத ஊழல்... ஜெட்  வேக வளர்ச்சி!! முதல் ஆண்டிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வருமானம்

கற்பனைக்கு எட்டாத ஊழல்... ஜெட்  வேக வளர்ச்சி!! முதல் ஆண்டிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வருமானம்

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும் உள்ளாட்சித்துறையின் 811 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில்  கடந்த 2018ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது.  ஒரே முகவரியில் இருந்து ஏராளமான டெண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டில் 3.14 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதாது ஒரே ஆண்டில் 273 .81 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. 

constronics india என்ற நிறுவனம் 2014ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அடுத்த வருடமான 2015-2016 நிதியாண்டில் 0.86 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. 

2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 42.11 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. அதாவது 4796 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. 

ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் 2014ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அடுத்த வருடமான 2015-2016 நிதியாண்டில் 0.93 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது.  

கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் 2012 -2013 நிதியாண்டில் 42.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2018 -2019ம் நிதியாண்டில் 453.92 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதாவது 7 வருவடத்தில் 967.04 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. 

சிஆர் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் 2012 -2013 நிதியாண்டில் 0.38 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2018 -2019ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 43.52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதாவது 7 வருடத்தில் 11363.15 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது.

இதேபோல் ஏசிஇ டெக் மெசினரி, பி.செந்தில் அன்கோ, வரதன் இன்பராஸ்ட்ரக்சர், ஆலயம் பவுண்டேசன், உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த சொத்து வளர்ச்சி குறித்து திமுக அளித்த புகாரில் கூறப்பட்டிருந்தது.  லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் இந்த விசாரணையில், எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான கம்பெனிகள் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 11,363 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.