இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி,.. ஓபிஎஸ் தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ...!

இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி,..  ஓபிஎஸ் தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ...!

எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ்  தரப்பு  சார்பில் போஸ்டர் ஒட்டுப்பட்டுள்ளதால் பரபரப்பு.....

எடப்பாடி பழனிச்சாமி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது . குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து மற்றும் வருவாய் போன்றவற்றை தவறாக குறிப்பிட்டு இருக்கிறார் என்பது தொடர்பான வழக்கினை  சேலம் மத்திய குற்றப்பிரிவு  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 மேலும் எடப்பாடி பகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைப்பெற்ற  செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அந்த அணியின் செய்தி தொடர்பாளரான புகழேந்தி அவர்களை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் புகழேந்தியின் காரை வழிமறித்து தாக்கினர். 
இது தொடர்பாக எடப்பாடி பகுதியை சார்ந்த ஓபிஎஸ் அணி ஆதரவாளரான எடப்பாடி ராஜேந்திரன், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் புகழேந்தி மீது தாக்குதல் நடத்தியதோடு, அவதூறு வார்த்தைகளை பேசி உள்ளனர். 

எனவே அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதையும் படிக்க     | ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது...5 ஆண்டுகள் கூடுதலாக இயங்க அனுமதி!

இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் அணி சார்பில் சேலத்தில் பழைய பேருந்து நிலையம் ,  புதிய பேருந்து நிலையம் ,  சேலம் டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, புகழேந்தியை  தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இதையும் படிக்க     | தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும்...ரூ. 2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றம்!