சைதாப்பேட்டை: 54 அடி காங்கிரஸ் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி மறுப்பு!

சைதாப்பேட்டை: 54 அடி காங்கிரஸ் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி மறுப்பு!

சென்னை: ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, 54 அடி கொடிக்கம்பம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால், சைதாப்பேட்டையில், காங்கிரஸ் கட்சியினர் நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை சைதாப்பேட்டை அடுத்த சின்னமலையில் வைக்கப்பட்டுள்ள ராஜுவ் காந்தி சிலை அருகே இன்று ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் கொண்டாடபட உள்ளது. இதையொட்டி 54 வயதை குறிக்கும் விதத்தில்,  54 அடி உயரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி கம்பத்தை, சின்னமலையில் வைக்கப்பட்டுள்ளராஜுவ் காந்தி சிலை அருகே வைக்க, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்ததனர்.

இந்நிலையில் முறையாக மாநில நெடுஞ்சாலைதுறையில் அனுமதி பெறமால் கொடிக்கம்பத்தை வைக்க கூடாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், முன்பே அங்கு பாதுகாப்பிற்காக  காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் குவிக்கபட்டனர். கொடி கம்பந்தை வைக்க எல்லாவகையான ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நெடுஞ்சாலை துறையினர் அனுமதிக்காததால் நள்ளிரவில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ராஜூவ் காந்தி சிலை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நெடுஞ்சாலைதுறை, 54 அடி வைக்ககூடாது என கூறி 24 அடியில் வைத்துகொள்ளலாம் என  அனுமதி அளித்தது. கொடி கம்பம் வைக்க அனுமதி அளித்ததை அடுத்து கம்பம் வைக்கும் பணியை தொடர்ந்தனர். இதனால், நேற்று  சின்னமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: சென்னையில் க்ரேனை திருடி வேறொரு மாநிலத்திற்கு விற்ற திருடர்கள்! : 5 பேர் கைது!