" கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.

" கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய  வேண்டும்..!" - திருமாவளவன்.

மதுரையில் பழங்காநத்ததில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் "சுற்றி வளைக்குது பாசிசப் படை; வீழாது தமிழ்நாடு; துவலாது போராடு " எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று பேசினர்.  

 மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில் "தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் மூலம் மதவெறியினை தூண்ட நினைக்கிறது என சாடினார். அதோடு,  கீழடியில் இராமன், அனுமன், கண்ணன் சிலை கிடைக்கவில்லையே என்பது பாஜகவுக்கு வருத்தம் எனவும் கூறினார்.

மேலும்,  தமிழக மக்கள் ஆரியர்களின் கடவுளை நாம் ஏற்றுக் கொள்ளவதில்லை; தமிழர்களுக்கு என்று வாழ்க்கை முறை உண்டு; அவையை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும் எனவும்,  கொற்றவை, வள்ளியை நாம் வணங்க வேண்டும் என்றும் கூறினார். மற்றும், இராமாயணத்தில் தமிழர்கள் மிக இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இராமன் என்பவர் தமிழக மக்களுக்கு எதிரி எனவும் விமர்சித்தார்.

ஆர்.எஸ்.எஸ் 'பலே' திட்டம்.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள்  - “வேற லெவல் கணக்கு”! | RSS gives Importance to Tamil nadu workers in  Nagpur saga - Tamil Oneindia

தொடர்ந்து  பேசிய அவர்,  தமிழகத்தின் ஒரு வருட பட்ஜெட் அதானியின் ஒரு வருட வருவாய் எனவும்,  அதானி ஒரு நாளைக்கு 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார என்றும், பாஜகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ் -ஐ  அப்புறப்படுத்த வேண்டும் எனவும், பாஜகவை விட 100 மடங்கு ஆபத்தானவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.  மேலும்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களையும் தங்கள் அலுவலகமாக மாற்றி வருவதாகவும்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேறருக்க தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்" எனவும்  பேசினார்.   

அதனைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில் 

ஆர்.எஸ்.எஸ். - பாஜக கூட்டு களவானிகளின் ஆட்சி தான் இந்தியாவை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது என்றும், அவர்களுடைய சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டுமல்ல; சாதி, மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தின் சுரண்டலாகவும் வலுப்பெற்று வருகிறது எனவும் கூறினார்.

மேலும், இந்தியாவில்  ஃபாசிசம்   தனித்தன்மை பெற்றுள்ளது என்றும்,  உலகின் பிற நாடுகளில் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி சுரண்டி கொழுத்து வருகின்ற அடிப்படையிலேயே பாசிசம் செயல்படுகிறது எனவும், அதோடு, இந்தியாவில் பாசிசத்துக்கு கூடுதல் பண்பு இருக்கிறது; அதாவது,  இந்தியாவில் சனாதன பாசிசம் இருக்கிறது. சாதியின், மதத்தின் பெயரால் மக்களை பாகுபாடு செய்கிற பண்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.

மதுவை விட கொடுமையானது சனாதனம்.. பாஜகவை போட்டு பொளந்த திருமாவளவன். |  Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.

தொடர்ந்து, சனாதனத்தின் பண்பு: பிறப்பின் அடிப்படையில் மிக நச்சுத் தன்மை வாய்ந்த, உழைக்கும் மக்களை துண்டு துண்டாக பிளவு படுத்துகிற ஆபத்தான பண்புகளை கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த சமூக பெண்களாக இருந்தாலும் அவர்கள் ஆண்களுக்கு கீழானவர்கள், பெண் சமூகம் 100% சூத்திரர்கள் என வரையறை செய்துள்ளது சனாதனம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த பாகுபாடு உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் கிடையாது எனவும், பிறப்பால் பெண்ணை கீழ்மைப் படுத்துகிறது சனாதனம் என்றும் கூறினார். அதோடு,  " பாஜகவை அரசியல் கட்சியாக புரிந்து கொள்ளக்கூடாது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 60 வயதில் பிரசவித்த பிள்ளை தான் பாஜக. பாஜகவை, காங், கம்யூனிஸ்ட் போல ஒரு சராசரியான அரசியல் கட்சியாக பார்க்க கூடாது", என்று பேசினார்.  

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிற கட்சி பாஜக எனவும், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற செயல்திட்டம் ஆர்.எஸ்.எஸ் -ன் இலக்காக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசுகையில், மதம் சார்ந்த நம்பிக்கைகளை துருப்புச் சீட்டுகளாக ஆர்.எஸ்.எஸ் வைத்துள்ளார்கள் எனவும், அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ள கோட்பாடு தான் இந்துத்துவா என்றும், இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக அவர்கள் திருப்புகிறார்கள் என்றும் கூறினார். மேலும்,  " இந்துத்துவா என்பதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஒளிந்து கொள்கிறது. பார்ப்பனர்களை தனிமைப்படுத்தினால் தான் நாம் நம் உரிமைகளை வெல்ல முடியும், இந்துத்துவா என்ற கோட்பாட்டின் கீழ் பார்ப்பனர் அல்லாதவர்களையும் அடைக்கிறார்கள். இதன் வழியாக பார்ப்பன எதிர்ப்பை முறியடிக்க முயற்சிக்கிறார்கள். இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை எதிர்ப்பது மட்டுமல்ல இந்துத்துவாவின் நோக்கம். இந்து பெரும்பான்மை வாதத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் நோக்கம்", என்றும் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க    } "கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது" கவர்னர் ஆர்.என்.ரவி...!!

மேலும், "அந்த பெரும்பான்மை  ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, ஒரே ஆட்சி என்பதே பாஜகவின் நோக்கம், தமிழகத்தில் தலித் ஒற்றுமையை சிதைத்து விட்டது சனாதனம். தீவிர இடதுசாரி அரசியல் பேசியவர்கள் எல்லாம் இப்போது தீவிர வலதுசாரி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவது மிக ஆபத்தானது என்றும், இன்று கர்நாடகாவில் காங்கிரசை வெற்றி பெற வைத்தவர்கள் 40% இந்துக்கள் தான். அந்த மக்கள் பாஜக பேசிய மதப்பிரிவினை அரசியலை வெறுத்துள்ளார்கள் என்பதே இதன் சான்று. ஹிஜாப் உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்த பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துள்ளார்கள் என்றும், " அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும். நமக்கிடையில் எவ்வளவு முரண்கள் இருந்தாலும் நாம் சேர வேண்டும். " கருத்தியல் முரண்கள் இருந்தாலும் பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்"  என பேசினார்.  

இதையும் படிக்க    } விஷச்சாராய விவகாரம்...! 'மெத்தனால்' சப்ளை செய்த 5 போ் கைது .....!