தமிழகத்தில் 3.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு... தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்...

தமிழகத்தில் தற்போதுவரை  மொத்தமாக 1,67,89,270 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இன்றுவரை 1,66,41,262 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு... தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை சார்பாக தெரிவித்திருக்கும் நிலையில் 18 லட்சம் தடுப்பூசி தற்போது வரை வந்துள்ளது.

மேலும் ஜூலை மாதத்திற்கான வந்துள்ள 18 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது 3.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. குறிப்பாக கோவிட்ஷில்டு மருந்து மட்டும் தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் கோவாக்சின் தற்போது கையிருப்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பாக ஆன்லைன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்பவர்களுக்கு 70 டோஸ்களும் மற்றும் நேரடியாக வருபவர்களுக்கு 200 டேஸ்கள் என 250 நபர்களுக்கு தினசரி தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி குறைவாகவே கையிருப்பில் உள்ளதன் காரணமாக இன்று கோடம்பாக்கம் தடுப்பூசி மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு 70 தடுப்பூசிகளும் மற்றும் நேரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த 100 நபர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நபர்களுக்கு மேல் வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை மீண்டும் நாளை டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பி அனுப்பப்பட்டனர். மேல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு மொத்தமாக 1 கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 270 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இதுவரை 1 கோடியே 66லட்சத்து 41 ஆயிரத்து 262 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.