"பண மதிப்பிழப்பு நடவடிக்கை முட்டாள்தனமான முடிவு"  ப.சிதம்பரம் சாடல்!

"பண மதிப்பிழப்பு நடவடிக்கை முட்டாள்தனமான முடிவு"  ப.சிதம்பரம் சாடல்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முட்டாள்தனமான முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை சாடியுள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் 
எதிர்பார்த்தது போலவே மத்திய அரசும், ஆர்.பி.ஐ.யும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என்று கடந்த 2016-ம் ஆண்டு தாங்கள் கூறியதாகவும் தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.  500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்ட நிலையில் ஆயிரம் ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.ஐ.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை விமர்சித்துள்ளார்.

கனிமொழி 
2 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ரூபாயை மத்திய அரசே அழிக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இதுகுறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், 2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று பிரதமர் கூறிய நிலையில் தற்போது அந்த நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று கூறுவதாக குற்றஞ்சாட்டினார். இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் தான் அவதிப்படுகின்றனர் என்றும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

அசோக் கெலாட்
இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!